fbpx

ஷாக்…! மதுபானங்களின் மீதான கலால் வரி ரூ.10 வரை உயர்வு…! 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்…

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது 01.02.2024 தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி. 750 மி.லி கொள்ளளவுகளில் விறக்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மகிழ்ச்சி செய்தி...! ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் 2024 ஜூன் 31-க்குள் முடிக்க வேண்டும்...! முழு விவரம் இதோ...

Tue Jan 30 , 2024
ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது . இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகள்; பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது . மேலும் பள்ளிக் […]

You May Like