fbpx

இந்த உணவுகளை எல்லாம் மறந்தும் கூட பிரிட்ஜில் வைக்க கூடாது.! ஏன் தெரியுமா.!?

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது வீடுகளிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது சாதாரணமானதாகி விட்டது. இது பலரது வாழ்க்கையும் எளிதானதாக மாற்றி இருக்கிறது. ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்ணப்படும் உணவுகள் பலருக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. எல்லா உணவுகளையும் சமைத்து சூடாக சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும். இரண்டு நாட்கள் முந்தைய உணவை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து சாப்பிடும் போது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

ஒரு சிலர் பிரிட்ஜில் வைத்த உணவுகளை எடுத்து மீண்டும் சூடு செய்து சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடும் போது அந்த உணவில் இருக்கும் சத்துக்கள் அழிந்து பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெற்று உடலை தாக்குகின்றது. மேலும் ஒரு சில பொருட்களை கண்டிப்பாக ஃப்ரிட்ஜில் வைத்து உண்ண கூடாது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?

1. வாழைப்பழத்தை சாதாரணமாக வெளியில் வைத்து சாப்பிட்டால்தான் அதனுடைய முழு ஊட்டச்சத்தும் உடலுக்கு கிடைக்கும். அதிகப்படியான குளிரில் வைத்து சாப்பிடும் போது ஊட்ட ச குறைந்து சீக்கிரம் அழுகிவிடும்.
2. பொதுவாகவே தேன் என்பது நீண்ட நாட்கள் கெட்டுப் போகத ஒரு பொருளாகும். இதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடும்போது தேனின் தன்மை மாறிவிடும்.
3. சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்க கூடாது. அதிகமான குளிரில் இந்த பழங்கள் இருக்கும் போது சிட்ரஸ் தன்மை குறைந்து விஷத்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும்.
4. கீரைகளை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தும் போது இவற்றின் ஊட்டச்சத்துக்கள் முழுவதுமாக குறைந்து விடும்.
5. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஃப்ரிட்ஜில் வைக்கும் போது ஈரத்தன்மை அதிகம் அடைந்து மற்ற காய்கறிகளும் அழுகிவிடும்.
6. தண்ணீர் சத்து நிறைந்த காய்கறிகளான பூசணிக்காய், பரங்கிக்காய் போன்றவைகளை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.
7. பொதுவாக கடைகளில் வாங்கும் பிரட் போன்ற பேக்கரி ஐட்டங்களை 3 நாட்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து நீண்ட நாட்கள் உபயோகப்படுத்தி வந்தால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Rupa

Next Post

தூள்...! தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு...! முழு விவரம்

Wed Jan 31 , 2024
தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச […]

You May Like