Flash : குட்நியூஸ்.. விலை உயர்வுக்கு ரெஸ்ட்.. ஒரே நாளில் ரூ.1,520 குறைந்த தங்கம் விலை..!

gold price prediction

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இன்று பாரத் பந்த்: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகளுக்கு விடுமுறையா? முழு விவரம் இதோ..!

RUPA

Next Post

நகைகளை திருடிவிட்டு போர்வை போர்த்தி தூங்கிய கொள்ளையன்..!! தட்டி எழுப்பிய வீட்டு உரிமையாளர்..!! அடுத்து நடந்த சுவாரஸ்யம்..!!

Thu Feb 12 , 2026
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூரில், சினிமா பட பாணியில் ஒரு நகைச்சுவையான அதேசமயம் விசித்திரமான திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடச் சென்ற வீட்டில் நகைகளையும் பணத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, போதை தலைக்கேறியதால் அங்கேயே உறங்கிப்போன கொள்ளையனை, வீட்டின் உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். கௌரிபிதனூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் ஹைதராபாத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட […]
Crime 2026 10

You May Like