திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த அவர், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்க தொடங்கி, இறுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியை சந்தித்தார்.
கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற மு.க. ஸ்டாலின், கடந்த முறை அதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் இந்த முறை அந்த கோட்டையே சரிந்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களிலும், திமுக ஆதரவாளர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று ஒப்பீட்டாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் தோல்வியடைந்ததற்கு பின், பதவியில் இருந்த முதலமைச்சர் தோல்வி அடைந்த முக்கிய சம்பவமாக இது பார்க்கப்படுகிறது. இதனிடையில் கொளத்தூர் தொகுதிக்கு ஸ்டாலின் செய்த நன்மைகள் குறித்து சோஷியல் மீடியாவில் திமுகவினர் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். கொளத்தூருக்கு ஸ்டாலின் செய்த நன்மைகள் பின்வருமாறு..
* கொளத்தூரில் நீண்டகாலமாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், குடிநீர் வழங்கல் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. பல இடங்களில் புதிய குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டு, நீர் விநியோகம் மேம்படுத்தப்பட்டது.
* மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த, மழைநீர் வடிகால் (storm water drain) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம் குறைந்ததாக கூறப்படுகிறது.
* சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. உள்ளூர் சாலைகள் புதுப்பிக்கப்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
* அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டன. பொதுமக்களுக்கு எளிதில் சிகிச்சை கிடைக்க தேவையான வசதிகள் அதிகரிக்கப்பட்டன.
* கல்வி துறையில், அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு, கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன.
மேலும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் வகையில், ஸ்டாலின் அடிக்கடி தொகுதிக்கு வருகை தந்து கண்காணிப்பு மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அனைத்து முயற்சிகளாலும், கொளத்தூர் தொகுதியை “மாடல் தொகுதி” ஆக மாற்ற முயற்சி செய்தார். கொளத்தூர் தொகுதியை தனது பிள்ளையை போன்று பார்த்த மு.க. ஸ்டாலினை தோற்கடித்து விட்டீர்களே என திமுகவினர் ஆதங்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
Read more: விஜய்க்கு முதலமைச்சர் சிம்மாசனம்.. ஆதரவு தெரிவிக்கும் திமுக கூட்டணி கட்சிகள்..? பரபர ட்விஸ்ட்!



