தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் தமிழக அமைச்சரின் மகள்..!! யார் இந்த இமயா..? என்ன படம்..?

Iniya 2026

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார்.


அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் அவர் முக்கியப் பங்காற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துப் பேசிய இயக்குநர் கிஷோர், “ஆடிஷன் மூலமாகவே இமயாவை தேர்வு செய்தோம். அவர் தேர்வான பிறகுதான் அவர் அமைச்சரின் மகள் என்பதே எங்களுக்கு தெரிந்தது. சினிமா கனவிற்காக தன்னை அவர் முழுமையாக தயார்படுத்திக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கும் இந்தப் படத்தில், ரஜினிகாந்தின் ‘பேட்ட’ மற்றும் விக்ரமின் ‘மகான்’ படங்களில் முத்திரை பதித்த சனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இமயாவுடன் இணைந்து மற்றொரு கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இரண்டு பெண்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு ‘பீல்குட்’ (Feel-good) கதையாக இது உருவாகியுள்ளது.

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. படம் வெளியாகும் போது இமயாவை அறிமுகப்படுத்தும் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திரையுலகில் ஒரு நடிகையாகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தடம் பதிக்க காத்திருக்கும் இமயாவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Read More : 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 வேண்டுமா..? மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

CHELLA

Next Post

ரூ.5,000 உரிமைத்தொகை..!! காட்டுத் தீயாய் பரவிய வதந்தி..!! வங்கி, ஏடிஎம்களில் அலைமோதிய கூட்டம்..!! தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்..!!

Sat Feb 14 , 2026
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கீழ் நிலுவைத் தொகையுடன் சேர்த்து நேற்று ஒரே தவணையாக ₹5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. நேற்று தொடங்கி இன்று (பிப்ரவரி 14) காலை வரை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்தத் திடீர் வரவு ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் […]
Magalir Thogai 2026

You May Like