அரசியல் நாகரிகம்.. விஜய்க்கு வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.. ஸ்டாலின் பதிவு..!

stalin vijay n

தவெக தலைவர் விஜய் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்..


முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோ- சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்- சூட் வந்து பங்கேற்றார்.. மேலும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாக முதல்வர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.. இதையடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்..

இந்த சூழலில், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை முதல்வர் விஜய் சந்தித்தார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க ஸ்டாலினை சந்தித்து முதல்வர் விஜய் சந்தித்தார்.. முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் ஆரத்தழுவி வரவேற்று அழைத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அழைத்து சென்றார்.. முதல்வர் விஜய் – ஸ்டாலின் சந்திப்பின் போது தங்கம் தென்னரசு, சேகர்பாபு, அ.சக்ரபாணி, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.. இதையடுத்து முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.. தொடர்ந்து வைகோ உள்ளிட்ட தலைவர்களின் வீடுகளுக்கும் செல்லும் விஜய் அவர்களிடம் வாழ்த்து பெறுகிறார்..

இந்த நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் ” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

காலையில் ஒரு மணி நேரம் உங்கள் போனை பயன்படுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Mon May 11 , 2026
காலையில் கண் விழித்ததும் நாம் செய்யும் முதல் செயல் என்ன? அலாரத்தை நிறுத்துவது… அதைத் தொடர்ந்து உடனடியாக வாட்ஸ்அப் அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் மின்னஞ்சல்கள் நிறைந்த உலகிற்குள் மூழ்கிவிடுவது. இது கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல நமது மூளையைச் சோர்வடையச் செய்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால்தான், ‘டிஜிட்டல் நச்சு நீக்கம்’ (Digital Detox) எனப்படும் ஒரு புதிய […]
smartphone 1 1

You May Like