மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை..! இன்று அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Jewellery 1

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,16,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

எனினும் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை., அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இந்தியாவில் அதிக வருமானம் தரும் சுங்கச் சாவடிகள் இவைதான்; இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..!

RUPA

Next Post

அடிப்படை அறிவைக்கூட நயினார் இழந்துவிட்டார்.. த்ரிஷா குறித்த விமர்சனம்.. நாஞ்சில் சம்பத் பதிலடி..!

Sat Feb 14 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]
nanjil sambath

You May Like