தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விஜய்க்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.. ஆனாலும், அதனை மீறி சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கை ஈடுபட்டதாக கூறி, சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் எம்.எல்.ஏக்களாக உள்ள பலரின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே அவருக்கு எதிரான போஸ்டர்கள் தொடர்ந்து ஒட்டப்பட்டு வருகின்றன.. சமீபத்தி. “ எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்..” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டன..
இதன் தொடர்ச்சியாக தற்போது சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.. அந்த போஸ்டரில் “ கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. 4 முறை தொடர் தோல்வி கண்ட எடப்பாடி பழனிசாமியே பதவியில் இருந்து விலகிவிடு, இல்லை என்றால்..” என்று எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.. இந்த போஸ்டர்களை கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற அதிமுக மூத்த நிர்வாகி ஒட்டியதாக கூறப்படுகிறது..
சேலத்தில் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவது அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருவதையே காட்டுகிறது..
Read More : துஷ்ட சக்தியாக மாறிய தூய சக்தி.. குதிரை பேரம் நடத்தி அதிமுகவின் முதுகில் குத்திய தவெக.. விளாசிய இபிஎஸ்..!



