திமுக உடன் கூட்டணி.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முக்கிய முடிவு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

imul dmk share

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..


திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. விஜய்யின் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராததால் தவெகவும் தனித்து போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. அன்புமணி பாமக அதிமுக உடன் இணைந்துள்ளது. தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..

ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. என் வாக்குச்சாவடி, வெற்றிவாக்குச்சாவடி போன்ற முன்னெடுப்புகளை அக்கட்சி தொடங்கி உள்ளது. மறுபுறம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை குழுவை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைத்துள்ளது.. காதர் மொய்தீன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அந்த கட்சி அமைத்துள்ளது.. திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுப் பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த குழு உடன் 2 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தொகுதிகள் இறுதி செய்யப்படும்.. அதன்பின்னர் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும்..

2021 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 3 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததது என்பது குறிப்பிடத்தக்கது..

RUPA

Next Post

Breaking : தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Wed Feb 18 , 2026
திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 தமிழக மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதி நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி வரும் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 26-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 வேட்பு […]
Untitled design 5 6 jpg 1

You May Like