இலாகாவை மாற்ற அழுத்தம்..!! முடிந்ததை செய்யட்டும்..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி பேட்டி..!!

Tasmac Vignesh 2026

கோவையில் நடந்த தொழில்துறை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், மதுக்கடைகளில் முறைகேடு செய்பவர்கள் மீது 24 மணி நேரத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார்.


கோவை சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருடன் அமைச்சர் மதன்ராஜ் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் உடன் பங்கேற்ற அமைச்சர் விக்னேஷ், பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “மதுக்கடைகளில் ஏதேனும் முறைகேடுகளோ, தவறுகளோ நடந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுப்பதில் எந்தவித சமரசமும் இருக்காது. தவறுகளை இந்த அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அதே சமயம், சில பகுதிகளில் ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன. எனவே, ஒரு புகார் உண்மையெனத் தெரியவந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை உறுதி செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து, “உங்கள் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சில மதுபான ஆலை உரிமையாளர்கள், உங்கள் இலாகாவை மாற்ற அரசுக்கு அழுத்தம் தருவதாகக் கூறப்படுகிறதே?” என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அது உண்மையா எனத் தெரியவில்லை. பொதுவாக நல்லது செய்யும்போது சும்மா இருப்பவர்கள் இதுபோன்ற அழுத்தங்களை தருவது வழக்கம் தான். அவர்களால் முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்; அதைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று பதிலளித்தார்.

Read More : UPIஇல் கட்டணமின்றி எவ்வளவு வரை பணம் அனுப்பலாம்..? இவர்களுக்கு முழு விலக்கு..!! மத்திய அரசு திடீர் உத்தரவு..!!

Next Post

நவராத்திரி எப்போது வருகிறது? 9 நாளும் விரத முறைகளும்..! அம்பிகையின் அருள் பெற இதை பண்ணுங்க..!

Wed Sep 16 , 2026
பெண்மையின் தெய்வீக ஆற்றலையும், பிரபஞ்சத்தை இயக்கும் ஆதிசக்தியின் ஒன்பது திருவுருவங்களையும் போற்றித் துதிக்கும் உன்னதமான ஆன்மீகத் திருவிழாவாக நவராத்திரி விளங்குகிறது. ஒன்பது இரவுகள் தொடர்ச்சியாக அனுசரிக்கப்படும் இந்த வழிபாட்டுக் காலத்தில், வீடுகள்தோறும் பராசக்தியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும், மங்கல வாழ்வும் கிட்டும் என்பது பன்னெடுங்கால நம்பிக்கை. வழக்கம் உள்ளவர்கள் படிகள் அமைத்துப் பாரம்பரியக் கொலு வைத்தும், கொலு வைக்க இயலாதவர்கள் மங்கலக் கலசம் நிறுவியோ […]
Navarathri 2025

You May Like