தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10,000 விருப்ப மனுக்கள் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் வாங்கப்பட்டன.. கூட்டம் அதிகமாக இருந்ததால் பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.. பனையூர் பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வர வேண்டாம்.. ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது..
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வரும் 20-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதுவரை, பனையூர் அலுவலகத்தில் நேரில் வாங்கிய 10,000 பேரும், ஆன்லைன் வழியாக 40,000 பேர் என மொத்தம் 50,000 பேர் தவெகவில் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர்..
இதற்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.. ஆனால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து திரும்பி ஒப்படைக்கும் போது, பொதுப்பிரிவினர் ரூ.10,000, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும்..
ஆனால் தவெக அலுவலகத்திற்கு திரும்பி வந்த மனுக்களின் எண்ணிக்கை வெறும் 5000 தான் என்று கூறப்படுகிறது.. இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில் அதற்கு விருப்ப மனுக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு உயருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.. மேலும் தவெக கட்சி தலைமையும் இதற்கான புரியாமல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
Read More : திமுக உடன் கூட்டணி.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முக்கிய முடிவு..! பரபரக்கும் தேர்தல் களம்..!



