தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..
இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நேற்று திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..
தனது 20 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை.. தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க திமுக உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக திமுக தலைமையிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதில் இருந்து 7 தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..
அதன்படி, கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கேவி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக கொடுத்துள்ளதாம்..
இந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கணவர் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசத்தில் களம் இறங்க திட்டமிட்டுள்ளாராம்.. ஆனால் திமுக தலைமையோ பிரேமலதாவை சென்னை களம் இறங்குமாறும் கூறி உள்ளதாம்.. குறிப்பாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாம்.. ஏனெனில் அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதாம்.. அதனால் அவரை எதிர்க்க பிரேமலதா விஜயகாந்த் தான் சரியான போட்டியாளராக இருப்பார் என்று திமுக தலைமை கருதுகிறதாஅம்..
மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் பிரேமலதாவை திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Read More : “நேரு வழக்கில் முதலில் மாட்டுவது ஸ்டாலினும், உதயநிதியும் தான் போலயே..” அதிமுக பகீர் தகவல்..!



