நண்பனின் மனைவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்..!! வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி உல்லாசம்..!! கடைசியில் செம ஆப்பு..!!

rape 1

பெங்களூருவின் கோவிந்தாபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பீகாரைச் சேர்ந்த தையல் கலைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக உதவி செய்து வந்த ஜஹாங்கீர் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, காலப்போக்கில் நெருக்கமான குடும்ப நட்பாக மாறியுள்ளது. ஆனால், அந்த நன்மதிப்பை துஷ்பிரயோகம் செய்த ஜஹாங்கீர், கடந்த 2023-ம் ஆண்டு தையல்காரர் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவரது மனைவியை கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இந்த கொடூரத்தை அத்துடன் நிறுத்தாமல், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார் ஜஹாங்கீர். “இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்றும், “உன்னை கொலை செய்துவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்தப் பெண் அமைதியாக இருந்ததை சாதகமாக்கிக் கொண்ட ஜஹாங்கீர், தொடர்ந்து அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இடையில், தனது மகனின் மருத்துவச் சிகிச்சைக்காக அந்தப் பெண் சொந்த ஊரான பீகாருக்கு சென்றுவிட்டு, கடந்த 10-ம் தேதி மீண்டும் பெங்களூரு திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் திரும்பியதை அறிந்த ஜஹாங்கீர், மீண்டும் தனது இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, ஜஹாங்கீர் தனது அடுத்தகட்ட மிரட்டலை தொடங்கியுள்ளார். “உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையெனில் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பகிருவேன்” என மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், கோவிந்தாபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், ஜஹாங்கீர் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், ஆபாச வீடியோ எடுத்துத் துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருக்கும் ஜஹாங்கீரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Read More : காலையிலேயே அதிர்ச்சி..!! அதிமுகவுடன் கூட்டணி இல்லை..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிடிவி தினகரன்..!!

CHELLA

Next Post

விஜயகாந்த் சென்டிமென்ட்..!! அந்த தொகுதிகளை எங்களுக்கே கொடுங்க..!! பிரேமலதா கொடுத்த லிஸ்ட்..!! உடனே மறுத்த திமுக..!! பயங்கர அப்செட்..!!

Sun Feb 22 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, கூட்டணியில் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படும் தேமுதிக, தாங்கள் போட்டியிட விரும்பும் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை திமுக மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த கோரிக்கைப் பட்டியலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளுடன், மதுரை […]
Premalatha Stalin 2026

You May Like