அஜித் தாயார் மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்.. அருமை நண்பர் என பதிவிட்டு உருக்கம்..!

cm vijay ajith mother 1

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.. இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் படத்தின் அறிவிப்பு வெளியானாலே அதனை அவரின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.. திரையுலகிற்கு வருவதற்கு முன் பைக் ரேஸிங்கில் ஆர்வம் கொண்டவராக அஜித் இருந்தார்..


1991-ம் ஆண்டு, என் வீடு என் கணவர் படத்தின் மூலம் நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமானார்.. இதை தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்..

இந்த சூழலில் நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார்.. அவருக்கு வயது 84. சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாருக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.. அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அஜித்தின் தந்தை பி.எஸ். மணி என்கிற பி. சுப்பிரமணியம் கடந்த 2023-ம் ஆண்டு, தனது 85-வது வயதில் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் தாயாரின் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

உலகின் மிகவும் ஆபத்தான பறவை இதுதான்..! இதை தொட்டாலே மரணம் உறுதி..!

Sat May 30 , 2026
You might wonder whether the birds flying in the sky are poisonous. However, merely touching this bird guarantees death!
dangerous bird

You May Like