மாசி மகம்..!! அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Holiday 2025

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரங்கேறும் மகாமக பெருவிழாவிற்கு எந்த அளவிற்குப் புகழுண்டோ, அதே அளவிற்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசிமக திருவிழாவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான மாசிமக விழா கும்பகோணத்தில் களைகட்டியுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகத் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மார்ச் 2-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மாசிமக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவாலயங்களில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வீதி உலாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமானின் பஞ்சமூர்த்திகளும் ஒன்றிணைந்து அருள்பாலிக்கும் இந்த விழா, ஆன்மீக அன்பர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘மாசி மக தீர்த்தவாரி’ வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி புகழ்பெற்ற மகாமகக் குளத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கும்பகோணத்தின் பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு மகாமகக் குளத்தின் கரையில் எழுந்தருளுவார்கள். அங்கு சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த புனித நிகழ்வில் கலந்துகொண்டு புனித நீராடுவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பகோணத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாசிமக திருவிழாவைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 2-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, மார்ச் 14-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read More : நேர்காணல் கிடையாது..!! விஜய்யின் முடிவால் கடும் அதிருப்தியில் தவெக நிர்வாகிகள்..!! பிப்.28ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..?

CHELLA

Next Post

பார்த்த முதல் நாளே உல்லாச ஆசை..!! நம்பி போன இளம்பெண்..!! அந்த உறுப்பை பார்த்து பயங்கர ஷாக்..!! ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Feb 26 , 2026
ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு பகுதியில் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில் தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த நர்மதா (33) என்ற பெண், ஒரு திருநம்பியால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் மினி பேருந்தில் பயணித்தபோது, நர்மதாவிற்கும் 17 வயது திருநம்பி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த அறிமுகம் பேச்சாக தொடர்ந்து, அன்றைய இரவைத் தனிமையில் கழிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, […]
Erode 2026

You May Like