தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல், தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 27 ஆண்டுகால தம்பதியினரின் இந்த மணமுறிவு முடிவிற்கு, விஜய்யின் தனிப்பட்ட செயல்பாடுகளே காரணம் என அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் ஒரு பிரபல நடிகையுடன் நெருக்கமான உறவில் இருந்ததாகவும், அதனை தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கைகள் பலனளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்குக் கடுமையான மன உளைச்சலும், அலட்சியமும் ஏற்பட்டதாகக் கூறியுள்ள அவர், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் குடியிருப்பு உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஏப்ரல் 20, 2026 அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவில் குறிப்பிட்ட அந்த நடிகையின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷாவின் பெயரை இணைத்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள த்ரிஷா, ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். “யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. என்னைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படாத நிலையில், இப்படி அவதூறு பேசுவது காயப்படுத்துகிறது” என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
Read More : “குஷ்புவின் 38 கிலோ வெயிட் லாஸ் ரகசியம்”..!! ஜிம்முக்கே செல்லாமல் உடல் எடையை குறைத்தது எப்படி..?



