உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துவிட்டது. இதையறிந்த பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரோ சிறுவனின் உயிரை காப்பாற்ற விசித்திரமான பரிகாரத்தை செய்ய சொல்லியுள்ளார். அதாவது “சிறுவனைப் கங்கை நதி நீரில் 12 மணி நேரம் மூழ்கடித்து வைத்தால், பாம்பு விஷம் தானாகவே வெளியேறிவிடும்” என்று கூறியுள்ளார்.
மந்திரவாதி சொன்னதை கண்மூடித்தனமாக நம்பிய பெற்றோர், மூங்கில்களால் ஒரு தற்காலிக மிதவையை உருவாக்கி, அதில் சிறுவனை படுக்க வைத்து, அசையாதவாறு கயிற்றால் கட்டி, கங்கையில் மிதக்க வைத்துளனர். சுமார் 12 மணி நேரம் அந்தச் சிறுவன் தண்ணீரிலே இருந்துள்ளான். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த வீடியோவில், நதியில் மிதக்கும் மூங்கில் மிதவையில் சிறுவன் அசைவற்றுப் பிணைக்கப்பட்டிருப்பதும், கரையில் ஏராளமான மக்கள் ஏதோ ஒரு அதிசயம் நடக்கும் என்று வேடிக்கை பார்த்துக் காத்திருப்பதும் பதிவாகியுள்ளது. 12 மணி நேரம் கழித்து சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கடும் கண்டனங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பாம்பு கடித்த சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால், அந்தச் சிறுவனை மிக எளிதாகக் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், மூடநம்பிக்கையால் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. பார்க்க கூடாததை பார்த்த குழந்தைகள்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!



