அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. அபுதாபி, துபாய், கத்தார், குவைத் ஆகிய இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றம் அதிகரித்தது.
இந்த ராணுவ மோதல் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் பாபா வங்கா மற்றும் நோஸ்ட்ரடாமஸ் ஆகியோரின் முன்னறிவிப்புகளை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்..
பாபா வங்காவின் கணிப்பு என்ன?
பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கன் பகுதியின் நோஸ்ட்ரடாமஸ்” என அழைக்கப்படுபவர். 2026ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், உலகம் 5079ஆம் ஆண்டுவரை முடிவுக்கு வராது என்றும் அவர் கணித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, மிகப் பெரிய போர் ஏற்பட்டாலும், அது மனிதகுலத்தின் இறுதியாக இருக்காது என்ற கருத்தும் இதில் அடங்குகிறது. மேலும், சமூகம் “வெகு தூரம் சென்றுவிட்டது” என்பதை விரைவில் உணரும் ஒரு புள்ளிக்கு அருகே மனிதர்கள் உள்ளனர் என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
911ஆம் ஆண்டில் வாங்களியா பாண்டேவா குஷ்டரோவா என்ற பெயரில் பிறந்த பாபா வங்கா, 1996ஆம் ஆண்டு 85 வயதில் மறைந்தார். 9/11 தாக்குதல் மற்றும் COVID-19 போன்ற நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
நாஸ்ட்ராடாமஸின் கணிப்பு என்ன?
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸ், உலக அளவில் பெரிய மாற்றங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் கவிதை வடிவில் பல முன்கூட்டுச் சொற்களை எழுதியுள்ளார். இந்த ஆண்டில் ஒரு முக்கிய ஆண் தலைவர் கொல்லப்படலாம் அல்லது ஒரு அரசியல் புரட்சி நிகழ்ந்து ஒரு ஆட்சி நிலைகுலையலாம் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்..
மேலும், “7 மாதங்கள் நீடிக்கும் ஒரு பெரிய போர்” குறித்தும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரித்துள்ளார். அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் 9/11 தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைதளங்களில் எதிர்வினை
இந்த சூழ்நிலையில், சமூக வலைதளங்களில் “மூன்றாம் உலகப் போர்” என்பது அதிகமாக பேசுபொருளாக மாறியது. ஒருவர், “அமெரிக்கா கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும். எங்களுக்கு மூன்றாம் உலகப் போர் வேண்டாம்” என்று பதிவிட்டார்.
மற்றொருவர், “இப்போது நமக்கு உலகப் போர் 3 பற்றியே கவலைப்பட வேண்டியிருக்கிறது” என்றார். இன்னொருவர், “நான் தேர்வுக்குப் படிப்பதைத் தொடரலாமா, இல்லையா? உலகப் போர் 3 தொடங்கிவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஒருவர், “நாம் உலகப் போர் 3 நோக்கி போகிறோமா?” என்று சந்தேகம் தெரிவித்தார்.
மொத்தத்தில், மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸின் பழைய கணிப்புகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Read More : ஈரான்-இஸ்ரேல் மோதல்: ஈரானுக்கு விமானங்களை நிறுத்தி வைத்த நாடுகள் & விமான நிறுவனங்களின் லிஸ்ட்..!



