Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. வெள்ளி விலை ரூ.10,000 உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ..!

jewel 1

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ. 3 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!

RUPA

Next Post

Breaking : சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிக நிறுத்தம்..! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு..!

Tue Mar 10 , 2026
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.. பெட்ரோல் டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் […]
cylinder price 11zon

You May Like