திமுகவை விட்டு விலகிவிட்டோம்.. இனி தவெகவுக்கு தான் எங்கள் ஆதரவு.. வைகோ பரபரப்பு பேட்டி..!

vijay vaiko

திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ இனி திமுக உடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.. சிறு விமர்சனம் கூட வைத்தது இல்லை.  


திமுகவின் ஆ. ராசா மதிமுகவை அவமதிக்கும் வகையில் பேசினார். எங்கள் கட்சியில் இருந்து வெளியேறிய நபர் என்னை அவதூறாக பேசி இருக்கிறார். திமுகவை விட்டு விலகிவிட்டோம்.. இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக இருப்போம். அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கும் சமூக நீதியை பாதுகாக்கும் அரசாக தவெக அரசு செயல்படுகிறது.

முதல்வர் விஜய்யிடம் இருந்து நான் ரூ.50 கோடி வாங்கியதாக கூறுகிறார்கள்.. கட்சிக்காக சொத்துக்களை விற்றவன் நான், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சத்யாவை யார் மறைமுகமாக இயக்குகிறார்கள் என்பது தெரியும். ஜெயலலிதாவிடம் பணம் வாங்கினேன் என்றார்கள், உங்கள் நேர்மை பற்றி தெரியும் என்று ஐகோர்ட் நீதிபதியே கூறினார்.

எங்கள் எம்.எல்.ஏ. செந்தில் செல்வனை திமுகவில் சேர்த்தது குதிரை பேரமா? ஒட்டக பேரமா..? எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நானே வந்து பிரச்சாரம் செய்கிறே என முதல்வர் கூறியுள்ளார். ராஜினாமா செய்வது குதிரை பேரம் என சொல்ல முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

திமுக கூட்டணியில் 4 தொகுதிகள் தான் கொடுக்க முடியும். உதயசூரியன் சின்னம் என நிர்பந்தம் செய்தனர். தவெக தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை. திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது..” என்று தெரிவித்தார்.

Read More : பள்ளிகளில் இதை செய்வது ஆபத்தானது.. தவெக அரசு தனது முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.. டிடிவி தினகரன் கண்டனம்..!

RUPA

Next Post

இந்த அறிகுறிகள் இருக்கா..? தலை, கழுத்து புற்றுநோய் இருக்கலாம் என்று அர்த்தம்.! இதை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீங்க..!

Sat Jun 27 , 2026
தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் அறிகுறிகள்: தொண்டை வலி மற்றும் குரலில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரணமானவைதானே என்று நினைக்கிறீர்களா? ஆனால், இவை தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் 5 ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக இருக்கலாம்! தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான பழக்கவழக்கங்களால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் மிக வேகமாகப் பரவக்கூடிய […]
head n neck cancer

You May Like