அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்..! விஜய் கடைசி நேரத்தில் டீலுக்கு ஓ.கே சொன்னது எப்படி..? பரபர பின்னணி தகவல்கள்..!

vijay amitshah 2

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது.


தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மொத்தம் உள்ள 132 மாவட்ட செயலாளர்களில் 120 பேர் பங்கேற்றனர்.. அப்போது கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் ஆனந்த் கருத்து கேட்டுள்ளார். அதில் 80% மாவட்ட செயலாளர்கள் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.. அதே நேரம் தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டணியோ எப்படி போட்டி என்றாலும் கட்சி தலைமைக்கு கட்டுப்படுகிறோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியதாக தெரிகிறது..

தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. டெல்லி பாஜக இந்த விஷயத்தில் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. முதலில் 60 தொகுதிகள் என்று பாஜக தரப்பு கூறியுள்ளது..

ஆனால் தவெக தரப்பில் 90 தொகுதிகள் வரை கேட்டதாக கூறப்படுகிறது.. அதை கொடுக்கவும் பாஜக தலைமை தயாராக உள்ளதாம்.. அதன்படி அதிமுகவுக்கு 90 தொகுடிகள், தவெகவுக்கு 90 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், மற்ற கட்சிகளுக்கு 34 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

துணை முதல்வர் பதவியை விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் என்.டி.ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்றும் விஜய் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. பாஜக டெல்லி தலைமை மார்ச் 15-ம் தேதி விஜயை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாம். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி செல்கிறார். அதே நாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

தேர்தல் நெருங்கும் நிலையில் ஏன் தவெகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக டெல்லி தலைமை முயற்சிக்கிறது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன..

திமுக கூட்டணி வலுவாக உள்ளது, தற்போது சில புதிய கட்சிகளும் இணைந்துள்ளதால் திமுக கூட்டணி மேலும் வலுவாக மாறி உள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை முன்னிறுத்த முடியவில்லை என்று பாஜக கருதுகிறது… மோடி மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற பிறகும் கூட மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதை புரிந்துகொண்ட அமித்ஷா, விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம்..

சென்னையில் அண்மையில் ஒரு ரகசிய சந்திப்பில் பாஜக சார்பில் டீல் பேசப்பட்டிருக்கிறது. இதற்கு உடனடியாக தவெக தரப்பில் இருந்து பதில் வராததால் தான் விஜயின் தனிப்பட்ட விவகாரங்கள் பொதுவெளிக்கு கசியவிடப்பட்டன. அது சர்ச்சையானதற்குப் பிறகு விஜய் டீலுக்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

கட்சி தொடங்கியது முதலே பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் கூறி வருகிறார்.. கொள்கை எதிரியை பெரிதாக விமர்சிக்காம் அரசியல் எதிரியான திமுக கடுமையாக விமர்சித்து வந்தார்..

இந்த சூழலில் கொள்கை எதிரியோடு எப்படி கூட்டணி வைக்க முடியும் என்ற கேள்வி எழும்.. எனவே மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல், திமுக என்னும் பொது எதிரியை, தீய சக்தியை வீழ்த்த கொள்கை எதிரியாக இருந்தாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறோம், கொள்கையை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம், இது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் தான் என்று விஜய் அறிவிக்க உள்ளாராம்..

விஜயகாந்த் போல நீங்களும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிடலாம் என்று விஜய்யிடம் பாஜக கூறியதாம்.. எனவே தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணையவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..

Read More : ”ரஜினி எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சமாட்டார்.. ஆதவ் கூறியது பொய்.. ” திருமாவளவன் காட்டம்..!

RUPA

Next Post

லேசான சோர்வு கூட ஆபத்தானதா..? இதய நோய் குறித்து நீங்கள் அறியாத 7 அறிகுறிகள் இதோ..!

Sat Mar 14 , 2026
மாரடைப்பு என்பது ஒரு காலத்தில் முதியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் உடல்நலப் பிரச்சினையாகக் கருதப்பட்டன. ஆனால் இன்றைய வாழ்க்கை முறையின் காரணமாக, பதின்ம வயதினர்கள்கூட இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். இருப்பினும், இதய நோய் மற்றும் கரோனரி தமனி நோய் ஆகியவை குறித்து நமது உடல் முன்கூட்டியே சில எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சோர்வு, வாயுத் தொல்லை அல்லது மன அழுத்தம் என்று நாம் சாதாரணமாகப் புறக்கணிக்கும் பிரச்சினைகள், உண்மையில் […]
Heart attack Chest Pain Symptoms

You May Like