74 வயது மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. மௌன விரதமிருந்து மகளிர் பாதுகாப்பை பறிப்பது தான் மாற்றமா..? CM விஜய்க்கு நயினார் கேள்வி..!

vijay nainaar 2

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன..


சமீபத்தில் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது..

இந்த சூழலில் ஈரோட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசை விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும் போதைப்பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய திரு. ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது.

பிரச்சாரத்தின் போது “தூய சக்தி” என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌன விரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பது தான் “மாற்றமா” முதல்வர் திரு.
விஜய் அவர்களே? “மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது” என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : “தவெகவினர் இப்படி செய்வதை முதல்வர் விஜய்யே ஏற்றுக்கொள்ள மாட்டார்..” வீடியோ ஆதாரத்துடன் அண்ணாமலை விமர்சனம்..!

RUPA

Next Post

Flash : மொத்தமாக தட்டி தூக்கிய விஜய்..! Ex. அமைச்சர், பிரபல இயக்குனர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்..!

Sat Jun 20 , 2026
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
tvk 2

You May Like