ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கும் மத்தியில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ‘One Battle After Another’ திரைப்படம் 6 விருதுகளை வென்று விழாவில் அசத்த்யது.. ரியான் கூக்லரின் ‘Sinners’ திரைப்படம் 4 விருதுகளை தட்டி சென்றது..
2026 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை கோனன் ஓ’பிரையன் தொகுத்து வழங்கினார்.. அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்குவது இது இரண்டாவது முறையாகும்..
எழுத்தாளரும் இயக்குநருமான ரியான் கூக்லரின் ‘Sinners’ திரைப்படம், ஆஸ்கார் வரலாற்றிலேயே ஒரே படத்திற்கு அதிகபட்சமாகப் பரிந்துரைகளைப் பெற்றதற்கான சாதனையை முறியடித்துள்ளது; இப்படம் மொத்தம் 16 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு 14 பரிந்துரைகள் என்ற சாதனையை, ‘All About Eve’ (1950), ‘Titanic’ (1997) மற்றும் ‘La La Land’ (2016) ஆகிய படங்கள் தக்கவைத்திருந்தன. மொத்தம் 24 பிரிவுகள் இருந்த நிலையில், 2026 ஆஸ்கர் விழாவில் ‘சிறந்த நடிகர்கள் தேர்வு’ (Best Casting) எனும் புதிய பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.
‘Sinners’ படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்; இது அவருக்குக் கிடைத்த முதல் ஆஸ்கர் விருதாகும். தனது ஆஸ்கார் விருதைப் பெற்றுக்கொள்வதற்காக மேடை ஏறியபோது, அந்த நடிகர் உணர்ச்சிவசப்பட்டார்.
ஆஸ்கர் விருது பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ
சிறந்த திரைப்படம் – One Battle After Another
சிறந்த நடிகர் – மைக்கேல் பி ஜோர்டான் Michael B Jordan – Sinners
சிறந்த நடிகை – ஜெஸ்ஸி பக்லே Buckley – Hamnet
சிறந்த இயக்குனர் – பால் தாமஸ் ஆண்டர்சென் – One Battle After Another –
சிறந்த அசல் பாடல் – Golden – KPop Demon Hunters (பாடியவர்கள்: EJAE, Mark Sonnenblick, Joong Gyu Kwak, Yu)
சிறந்த சர்வதேசத் திரைப்படம் – Sentimental Value
சிறந்த ஒளிப்பதிவு – ஆட்டம் டுரால்ட் ஆர்காபா- Sinners
சிறந்த படத்தொகுப்பு – One Battle After Another
சிறந்த ஒலி அமைப்பு – F1, F1 – கரேத் ஜான், அல் நெல்சன், குவெண்டலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ ரிஸ்ஸோ மற்றும் ஜுவான் பெரால்டா
சிறந்த இசை (பின்னணி இசை) – Sinners
சிறந்த ஆவணத் திரைப்படம் – Mr. Nobody Against Putin
சிறந்த ஆவணக் குறும்படம் – All the Empty Rooms
சிறந்த காட்சி விளைவுகள் (VFX) – Avatar: Fire and Ash – ஜோ லெட்டேரி, ரிச்சர்ட் பனேஹம், எரிக் சைண்டன், டேனியல் பேரட்
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஃபிராங்கண்ஸ்டைன் – தமரா டெவெரெல் மற்றும் ஷேன் வியூ
சிறந்த மூலத் திரைக்கதை – Sinners – ரியான் கூக்லர்
சிறந்த தழுவல் திரைக்கதை – One Battle After Another – பால் தாமஸ் ஆண்டர்சன்
சிறந்த துணை நடிகர் – ஷான் பென் – One Battle After Another
சிறந்த நேரடி நடிப்பு குறும்படம் – The Singers மற்றும் Two People Exchanging Saliva
சிறந்த நடிகர்கள் தேர்வு (Casting) – One Battle After Another
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் -ஃபிராங்கன்ஸ்டைன்
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஃபிராங்கன்ஸ்டைன், கேட் ஹாலே
சிறந்த துணை நடிகை – ஏமி மேடிகன் (Weapons)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – KPop Demon Hunters
சிறந்த அனிமேஷன் குறும்படம் – The Girl Who Cried Pearls
சிறந்த சர்வதேசத் திரைப்படம் : Sentimental Value
Read More : Flash : மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..! 10 நோயாளிகள் உடல் கருகி பலி..! ஒடிசாவில் சோகம்..!



