தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 7 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது.. தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது..
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர் “ தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 2106 பறக்கும் படை கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர் அளிக்கப்படும்.. தமிழ்நாட்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது.. வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட7 நாளில் 5 நாள் தான் மனு தாக்கல் செய்ய முடியும், மற்ற 2 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்..
பணம் தொடர்பான கட்டுப்பாடுகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணம் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது. பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாது..? என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ரூ.2 லட்சம் பணத்துடன் நகை வாங்க பணத்துடன் சென்றால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு பதிலளித்த அதிகாரி “ நகை வாங்க கொண்டு செல்லப்படும் பணம் உங்களுடையது தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.. அதற்கான ஆதாரம் வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : தவெகவை NDA கூட்டணிக்குள் இழுக்க பாஜக போடும் மாஸ்டர் பிளான்..! விஜய் வைத்த 2 டிமாண்ட்..! பரபர தகவல்கள்..!



