தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.. இந்த ஆர்ப்பாட்டங்களில் கூட்டணி கட்சியினரும் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்பரம் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. அப்போது பேசிய கலந்து கொண்டு பேசினார்.. அப்போது திமுகவுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து, கோஷங்களை எழுப்பினார்.
அராஜக திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப இறுதி வாய்ப்பு.. இந்த ஆட்சியாளர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்.. தமிழ்நாட்டு மக்களின் வளங்களை கொள்ளையடித்துள்ள திமுக அரசு, அதற்கு பொறுப்பான முதல்வர், அமைச்சர்கள் உட்பட அத்தனை பேரையும் புழல் சிறைக்கு அனுப்பும் நாள் ஏப்ரல் 23. பாஜகவினரிடம் கூறி உள்துறை செயலாளரை மாற்ற வேண்டும்.. கஞ்சா போதையால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.. ஆனால் இதுகுறித்து விவாதிக்க வேண்டாம் என்று உள்துறை செயலாளர் கூறுகிறார்.. இப்பட்டிப்பட்ட உள்துறை செயலாளரை வைத்துக் கொண்டு எப்படி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும்.. தேர்தலை எப்படி நியாயமாக நடத்த முடியும்.” என்று கூறினார்..
தொடர்ந்து பேசிய சி.வி. சண்முகம் தமிழக அரசின் உங்க கனவை சொல்லுங்க திட்டம் பற்றி கொச்சையாக பேசினார்.. அப்போது பேசிய அவர் “ அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் உங்க கனவ சொல்லுங்க.. நிறைவேற்றுகிறோம் என்று முதல்வர் சொல்கிறார்.. ஆமாம்.. எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேறுவாரா? என்று பேசினார்.. எனக்கு நயன்தாராவை எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்பான் இவர் நிறைவேற்றுவாரா? அதுவும் ஆட்சி முடிந்த நிலையில், உங்க கனவை சொல்லுங்க நான் நிறைவேற்றுகிறேன்.. என்று சொல்கிறார்.. சி.வி. சண்முகம் பொதுவெளியில் பேசிய இந்த அநாகிரீக பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
Read More : “காலம் பேசாது.. ஆனால்..” ஆதவ் சர்ச்சை கருத்து.. மௌனம் கலைத்த நடிகர் ரஜினிகாந்த்..!



