நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு.. சி.வி சண்முகம் மன்னிப்பு கேட்கணும்.. நடிகர் சங்கம் கண்டனம்..!

cv shanmugam nadigar sangam

திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து பேசினார்.. மேலும் “ எனக்கு நயன்தாரா வேண்டும்.. கனவை நிறைவேறுவாரா? அதுவும் ஆட்சி முடிந்த நிலையில், உங்க கனவை சொல்லுங்க நான் நிறைவேற்றுகிறேன்.. என்று சொல்கிறார்.. சி.வி. சண்முகம் பொதுவெளியில் பேசிய இந்த அநாகரீக பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..


இந்த நிலையில் சி.வி சண்முகத்தின் பேச்சுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சமீபத்தில் தாங்கள் (சி.வி. சண்முகம்) பேசிய மிகவும் கீழ்த்தரமான கேட்கவே கூசுகின்ற காணொளி எங்கள் பார்வைக்கு வந்தது. தொடர்ந்து நடிகர் சமூகத்தின் கண்டனங்களும் கோபங்களும் கைப்பேசி வழியாக தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. தேர்தல் களத்தில் கருத்துரீதியாக கொள்கைரீதியாக கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அடிப்படை கண்ணியத்தோடு, அதுவும் பொறுப்பில் இருக்கின்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாளவேண்டி இருக்கிறது.

ஆனால் தாங்கள் சபை நாகரீகத்தை விட்டொழித்து ஒலிபெருக்கி மூலமாக எங்கள் சகோதரி நயன்தாராவை உட்படுத்தி பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஐயா அப்துல்கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். சரி மக்கள் காண்கின்ற கனவை நனவாக்கி தர அண்டை நாட்டிடமா கேட்க முடியும்.

மக்களின் கனவு என்பது. ஒரு ஏழையின் கூரையாக இருக்கிறது. விவசாயி மகனின் கல்வியாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் பெண்ணின் வாய்ப்பாக இருக்கிறது. தொழிலதிபர்களின் உள்கட்டமைப்பாக இருக்கிறது. எல்லை காக்கும் ராணுவ வீரனுக்கு பாதுகாப்பாக இருக்கிறது, ஆனால் தங்கள் கனவு என்னவாக இருக்கிறது என்று வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக பேசியதற்கு பாராட்டவா முடியும்.

இது பெண்களின் யுகம் அவர்கள் இல்லாத துறையே இல்லை வாள் கிழிக்கும் ராக்கெட்டில் இருந்து மருத்துவராக ஆசிரியராக வழக்கறிஞராக பெரும் இயந்திரங்களை இயக்குபவர்கள பேருந்து ஓட்டும் பெண்களை சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. அரசியலில் கோலோச்சிய இந்திரா காந்தி அம்மையார் உங்கள் தலைவி ஜெயலலிதா அம்மையாரை விடவா உதாரணம் இருக்க முடியும்..

அப்படி இருக்க சினிமா நடிகைகளை இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்? இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா? தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? அல்லது ஆமோதிக்கிறார்களா? மக்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற மரியாதை இன்னும் இருக்கிறது என்ற காரணத்தினால் நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில் கேட்கிறோம். தங்களிடமிருந்து மன்னிப்பும் இனி எங்கள் துறை சார்ந்த பெண் திறன்களை மரியாதை குறைவாக பேசமாட்டேன் என்கின்ற உத்தரவாதமும்.” என்று தெரிவித்துள்ளது.

Read More : திருப்பரங்குன்றம் வழக்கு.. ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!

RUPA

Next Post

சி.வி. சண்முகம் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யணும்.. நயன்தாரா குறித்த அருவருப்பான பேச்சு.. எம்.பிக்கள் கனிமொழி, ஜோதிமணி கண்டனம்..!

Tue Mar 17 , 2026
திமுக அரசை கண்டித்து என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… அந்த வகையில் விழுப்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சி.வி சண்முகம் பேசிய சி.வி. சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்தார்.. மேலும் “ அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார்.. முதலமைச்சர் அதைவிட ஒரு படி மேலே போய் […]
CV Shanmugam kanimozhi jothimani

You May Like