இஸ்லாமியச் சொந்தங்களின் புனிதத் திருநாளான ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, இன்று நடைபெற்றது.. மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 1000 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார்.. செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்..
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் “ நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே நாம் அந்த டீம், இந்த டீம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நாம் எந்த டீமும் கிடையாது.. மக்களுடைய டீம் என்று தெரிந்த பின்னர் வேறு ஏதாவது அவதூறு பரப்பலாம் என்று நினைத்தனர்.. ஆனால் அது எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.. எனவே கடைசியில் என்ன தான் இந்த விஜய்யை பண்ணலாம் என்று நினைத்து, இந்த கூட்டணியில் சேரப்போகிறார், அந்த கூட்டணியில் சேரப்போகிறார் என்று பொய்யான பிரச்சாரத்தை தொடங்கினர்..
இந்த செய்தியை கேட்டு அனைவரும் குழப்பமடைந்திருப்பீர்கள்.. ஆனால் நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன்.. மதச்சார்பின்மை என்பதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம்.. அந்த பேச்சுவார்த்தையே கிடையாது.. தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.. அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் எந்த சமரசமும் கிடையாது.
யார் என்ன அவதூறு பரப்பினாலும் அதை நம்பாதீங்க.. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது இலக்கை அடைய முடியும்.. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்கள்.. நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்.
Read More : தமிழ்நாட்டில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் தகவல்..!



