2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.. தமிழக தேர்தல் களத்தில் 1967-க்கு பின் திராவிட கட்சி அல்லாத மற்றொரு கட்சி புதிதாக அட்சியமைக்க உள்ளது..
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் குறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் ” ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி.. பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார் விஜய்..!



