பாஜகவில் இருந்து விலகலா..? இன்று முடிவை அறிவிக்கிறார் சரத்குமார்..! பரபரக்கும் அரசியல் களம்..!

Sarathkumar BJp

நடிகர் சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜக உடன் தனது கட்சியை இணைத்தார்.. தொடர்ந்து அவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறது.. பாஜக மேலிடம் அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவதாக தெரிவித்திருந்தது.. அதே போல சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து பாஜகவோடு இணைந்த நிர்வாகிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.


மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்விலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில் தற்போது வரைக்கும் பாஜக எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை..

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சரத்குமாரின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. எனவே இன்று தனது ஆதரவாளர்களுடன் சரத்குமார் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்த ஆலோசனைக்கு பின் , தனது நிலைப்பாடு குறித்து அவர் கருத்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் இருந்து சரத்குமார் விலகப் போவதாக தகவல் வெளியானது..

இந்த நிலையில் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவலுக்கு பாஜக நிர்வாகி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று ஆதரவாளர்களுடன் நடைபெற உள்ள ஆலோசனை வழக்கமான ஒன்று எனவும் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் தமக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என கூறப்படுவது முற்றிலும் தவறு என்றும், பாஜகவில் இருந்து வெளியேற போவதாக வெளியான தகவலும் தவறான தகவல் எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Read More : டெல்லி சென்றது ஏன்? அமித்ஷா உடன் பேசியது என்ன? டிடிவி தினகரன் விளக்கம்..!

RUPA

Next Post

மாதம் ரூ. 2,200 மட்டும் முதலீடு செய்தால், உங்கள் கையில் ரூ. 1,57,004 இருக்கும்..! அசத்தல் திட்டம்..!

Sun Mar 22 , 2026
தபால் நிலையங்களில் சிறந்த திட்டங்கள் பல தற்போது கிடைக்கின்றன. ஒரு காலத்தில் கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்பட்டு வந்த தபால் நிலையங்கள், இப்போது பல அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் மையங்களாகத் திகழ்கின்றன. பல்வேறு வகையான வைப்புத்தொகைகளுக்கு இவை கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எந்தவித இடரும் இன்றி, பல ஆண்டுகளுக்கு நீங்கள் இதில் வைப்புத்தொகையைச் செலுத்தலாம். இந்திய அஞ்சல் நிலையத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். ‘தொடர் வைப்புத்தொகை’ (Recurring […]
Post Office Investment

You May Like