Breaking : தொடர் சரிவில் தங்கம் விலை..! இன்றும் தடாலடியாக குறைந்தது.. எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

gold price nn

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று ஒரு கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ. 10,000 குறைந்து வெள்ளி ரூ. 2.40 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக நேற்று ஒரே நாளில் ரூ. 7,600 குறைந்த நிலையில் இன்றும் ரூ.2720 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : தங்கம் விலை ஏன் திடீரென சரிந்து வருகிறது..? நகை வாங்க இதுதான் சரியான நேரமா..? நிபுணர்களின் பதில் இதுதான்..!

RUPA

Next Post

“மக்களை காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” மேற்காசிய போர்.. முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

Tue Mar 24 , 2026
Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறயதை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா? Covid19-க்குத் தயாரானதுபோல் மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். 11/03/2026 : போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனேயே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் […]
stalin modi

You May Like