தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.. இதில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலும் களமிறங்குகிறார்.
இதே போல் சிட்டிங் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பலரும் தங்களது தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர்.. மேலும் அம்பத்தூர், தி.நகர், அண்ணா நகர், ராயபுரம், எழும்பூர், திரு.விக. நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் மருத்துவர்கள் 15 பேர், முனைவர் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவினாசி தொகுதியில் திமுக வேட்பாளராக 28 வயதே ஆன மருத்துவர் கோகிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். தருமபுரி முன்னாள் எம்.பி செந்தில் குமார் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார்.. சர்ச்சையில் சிக்கி வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் துரைராஜ் போட்டியிடுகிறார்.
கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதே போல் அமைச்சர்கள் காந்தி, கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.. பொன்முடி, காந்திக்கு பதிலாக அவர்களது மகன்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் க. செல்வராஜின் மகன் கருணை ராஜா முசிறி தொகுதியில் போட்டியிடுகிறார்.. தஞ்சை, ஒசூர், நாகர்கோவில், திருப்பூர் மாநாகராட்சி மேயர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது..
இதன் மூலம் 120 தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றன.. 18 தொகுதிகளில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது..
Read More : திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது.. எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டி..?



