தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது போல, பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்காக விவசாயிகள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் தமிழ்நாடு அரசு முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.