தவெக பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீசியது யார்..? என்ன நடந்தது..? – போலீசார் விளக்கம்!

villivakkam meeting issue

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. 


இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிலையில் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா நடத்திய பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண் நிர்வாகிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் உடைந்த மதுபாட்டில்கள் விழுந்தது. கூட்டத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஒரு பெண் தொண்டருக்கு காயம் ஏற்பட்டது.

தாக்குதல் நடந்ததைக் கண்ட தவெக தொண்டர்கள் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேடையில் நின்று தொண்டர்களை அமைதி படுத்த முயன்ற ஆதவ் அர்ஜூனா, “இது போன்ற அச்சுறுத்தல்களுக்குத் தவெக அஞ்சாது” என மேடையில் ஆக்ரோஷமாகப் பேசினார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் மதுபாட்டில் வீடியது அரசியல் கட்சியினர் அல்ல. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மதுபோதையில் இருந்த ரித்திக் மற்றும் அப்புகுட்டி ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர், அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் விழுந்ததாக தெரிவித்தனர்.

Read more: Flash : 29 பேர் பலி.. ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து.. ரஷ்யாவில் பெரும் சோகம்..!

English Summary

Who threw the liquor bottle at the TVk public meeting..? What happened..? – Police explanation!

Next Post

பெரும் சோகம்.. வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் பலி..!

Wed Apr 1 , 2026
Gujarat: 5 Family Members Die In Surat House Fire Due To Suffocation
fire

You May Like