தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு.! ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு..!

tvk salem candidat

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வேலை பார்த்து வருகின்றனர்.. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்..


இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.. அந்த வகையில் சமீபத்தில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

தவெகவினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. சமீபத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் பெரம்பூரில் இருந்தே தனது தேர்தல் பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..

இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி தவெக வேட்பாளர் செல்வம், மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதி நிர்வாகிகளை சந்திக்க வருகை தந்தார்.. ஊருக்குள் நுழைய விடாமல் தவெகவினர் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. மேலும் செல்வத்தின் காரை வழிமறித்த தவெகவினர் அவரை ஊருக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர்..

ஜனநாயகன் படத்திற்கு தாங்கள் முன் பதிவு செய்த டிக்கெட்களை வாங்கி தங்களிடமே அதிக விலைக்கு விற்றதாகவும், ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் தவெக வேட்பாளர் செல்வம் மீது குற்றம்சாட்டி உள்ளனர்.. மேலும் தவெக நிர்வாகிகள் பலரும் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திரைக்கு வராத ஜனநாயகன் படத்தின் டிக்கெட்களை அதிக விலைக்கு விற்றதாக தவெக வேட்பாளர் மீது, அவர்களின் கட்சியினரே குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டிருப்பது சேலம் மாவட்ட தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து.. புது புயலை கிளப்பிய திருமாவளவன்..!

Wed Apr 1 , 2026
VKC leader Thirumavalavan says Armstrong's wife Porkodi's life is in danger
thirumavalavan 1

You May Like