16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜக்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கினார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் இவர் தனது பயணத்தை துவங்கினார். ஆயுத எழுத்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதன்பின், பாண்டியநாடு, குரங்கு பொம்மை, ஈஸ்வரன், ராக்கி, நம்ம வீட்டு பிள்ளை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே கடந்த 2025 மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகனும் பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். இவருடைய மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்மகன் மனோஜ் மறைவுக்குப் பிறகு பாரதிராஜா கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜா, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவருக்குக் கடுமையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் 24 மணி நேரத் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read more: Breaking : அடுத்த ஷாக்..! பெட்ரோல் விலை ரூ.7 உயர்வு.. டீசல் விலை ரூ.25 உயர்வு.. இன்று முதல் அமல்..!



