fbpx

பட்டப் பகலில் நடந்த கொடூரம்.! 17 வயது மாணவன் வெறி செயல்.! காதல் விவகாரத்தில் நடந்த கொலையா.? காவல்துறை விசாரணை.!

கோவையில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் மக்களை பதற்றம் அடைய செய்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். 17 வயதான இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் இருந்த பகுதியில் நின்று தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த அரிவாள் எடுத்து மாணவன் பிரணவின் கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் கொலை செய்த நபர் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையில் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் சிங்காநல்லூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பேரரசு(17) என தெரிய வந்திருக்கிறது. மேலும் எதற்காக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. பட்டப் பகலில் 17 வயது சிறுவன் சக மாணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

திடீரென பரவும் காய்ச்சல்..!! அனைத்து கறிக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

Sat Feb 17 , 2024
நெல்லூரில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஏராளமான கோழிகள் உயிரிழந்துள்ளன. சதகுட்லா மற்றும் கும்மல்லடிப்பா பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் சில நாட்கள் இடைவெளியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டன. அவர்கள், மாதிரிகளை எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது […]

You May Like