Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.10,000 சரிவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

gold jewlery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது..

அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ. 2.55 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம் வெள்ளி விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : ATM பயன்பாடு.. இனி கூடுதல் கட்டணம்..! ஆனால், இதை செய்தால், ஒரு ரூபாய் கூடக் கழிக்கப்படாது..!

RUPA

Next Post

இந்தியாவில் உள்ள இந்த இடத்திற்கு இந்தியர்கள் கூட செல்ல முடியாது.. இங்கு கால் வைத்தால் மரணம் நிச்சயம்..!

Thu Apr 2 , 2026
Even Indians cannot go to this place in India.. If you set foot here, you will surely die..!
tribes iland

You May Like