7.50% வட்டி.. 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம் முதிர்வுத் தொகை.. பாதுகாப்பான முதலீடு! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Post Office Investment

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கு பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது பலருக்கும் பெரிய குழப்பமாக உள்ளது. இதற்கு தீர்வாக தபால் துறையின் “போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்” (Post Office Time Deposit) திட்டம் முன்னிலையில் உள்ளது.


இந்தத் திட்டம் வங்கிகளில் உள்ள Fixed Deposit போன்றே செயல்படுகிறது. மத்திய அரசின் ஆதரவுடன் இயங்குவதால் அதிக பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. குறிப்பாக நடுத்தர குடும்பங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ரிஸ்க் இல்லாத முதலீட்டை விரும்புவோர் அதிகமாக இதில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டத்தில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம். தற்போதைய நிலையில் 6.90% முதல் 7.50% வரை வட்டி வழங்கப்படுகிறது. காலம் அதிகமாக இருந்தால் வட்டி பலனும் அதிகமாக கிடைக்கும். ஒருவர் ரூ.7,00,000 தொகையை 5 ஆண்டுகளுக்கு 7.50% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், சுமார் ரூ.3,14,964 வட்டி கிடைக்கும். அதனால் 5 ஆண்டுகள் முடிவில் மொத்தமாக ரூ.10,14,964 வரை பெற முடியும் என கணக்கிடப்படுகிறது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* குறைந்தபட்ச முதலீடு: ரூ.1,000 முதல் தொடங்கலாம்.

* அதிகபட்ச வரம்பு இல்லை.

* 5 ஆண்டு திட்டத்திற்கு வருமான வரி சட்டம் பிரிவு 80C கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை.

* 6 மாதங்களுக்கு பிறகு தேவையெனில் முன்கூட்டியே பணம் எடுக்கலாம் (வட்டி மாற்றத்துடன்).

* ஜாயிண்ட் அக்கவுண்ட் (3 பேர் வரை) தொடங்கலாம்.

* சிறுவர்களுக்கும் கணக்கு தொடங்க அனுமதி உண்டு.

எப்படி தொடங்குவது? இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் அருகிலுள்ள எந்தவொரு தபால் நிலையத்திலும் (Post Office) நேரில் சென்று கணக்கைத் தொடங்கலாம். செயல்முறை எளிமையானது மற்றும் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடியதாக உள்ளது.

Read more: காலங்காத்தால தலைமை காவலர் வீட்டில் கைவரிசை காட்டிய டவுசர் கொள்ளையர்கள்.. உச்சகட்ட பீதியில் மக்கள்..! என்ன நடந்தது?

English Summary

7.50% interest.. Rs. 10 lakh maturity in 5 years.. Safe investment! Do you know about this scheme of the central government..?

Next Post

ஓட்டு போட ஊருக்கு போறீங்களா..? ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிச்சா ஒரே ஒரு கால் பண்ணுங்க..!

Tue Apr 21 , 2026
Are you going to the city to vote? If you charge extra for Omni buses, just give me a missed call!
amni bus

You May Like