“உன் மகளை என்னிடம் அனுப்பு.. இந்த வழக்கிலிருந்து உன்னை காப்பாற்றுறேன்!” குற்றவாளியிடம் டீல் பேசிய காவல் அதிகாரி சஸ்பெண்ட்! வைரல் வீடியோ..

Maharastra police

மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலா பகுதியில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலில் இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியான சலுகைகளை கோரியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் (ASI) ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த பெண், சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில், பால்கர் பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், காவலில் இருந்த பெண்ணிடம் தவறான முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தகவலின்படி, ராஜேஷ் ஜாதவ் என அடையாளம் காணப்பட்ட உதவி காவல் ஆய்வாளர், கைது செய்யப்பட்ட பெண்ணிடம், “உங்கள் மகளை என்னிடம் அனுப்புங்கள்; நான் உங்களுக்கு ரூ. 10,000 வழங்குவதுடன், இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற உதவி செய்வேன்” என்று கூறுயுள்ளார்.

பாலியல் ரீதியான சலுகைகளை கோரியதாக கூறப்படும் இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியை ஒரு மூத்த காவல்துறை அதிகாரி நேரில் சந்தித்து கடுமையாக கண்டிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியாகியதைத் தொடர்ந்து, சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, குற்றம் சாட்டப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Read more: இந்தியாவில் உள்ள இந்த இடத்திற்கு இந்தியர்கள் கூட செல்ல முடியாது.. இங்கு கால் வைத்தால் மரணம் நிச்சயம்..!

English Summary

Akola Cop Suspended Over Alleged Sexual Favour Demand From Cyber Fraud Accused

Next Post

அமெரிக்கா - ஈரான் போர்.. முக்கிய பெட்ரோ கெமிக்கல்களுக்கான சுங்க வரியை ரத்து செய்த இந்தியா.. முழு லிஸ்ட் இதோ..!

Thu Apr 2 , 2026
அமெரிக்க-ஈரான் போர் எப்போது முடிவடையும் என்பது குறித்த நிச்சயமற்ற நிலை தொடரும் நிலையில், பெட்ரோலிய வேதிப்பொருட்களைச் சார்ந்திருக்கும் தொழில்களுக்கு அரசாங்கம் வியாழக்கிழமை தற்காலிக நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது. உலகளாவிய விநியோகச் சங்கிலி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், முக்கியமான பெட்ரோலிய வேதிப்பொருட்களின் இறக்குமதிக்கு சுங்க வரியிலிருந்து அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், இறுதிப் பொருட்களின் நுகர்வோருக்கும் இந்த நடவடிக்கை நிவாரணம் அளிக்கும். ஜூன் 30 வரை […]
oil container

You May Like