பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு..? என்ன காரணம்..?

vijay 2

பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.. அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. மேலும் கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..

பெரம்பூரில் பிரச்சாரத்தை முடித்த விஜய் கெளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி சில நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட 4 இடங்களில் 2 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. முதல் நாளிலேயே விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

தொடர்ந்து நேற்றைய தினம் திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் தொகுதி மனுவில், தன் மீது எவ்விதக் குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக நேற்று தாக்கல் செய்யப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதி மனுவில், தன் மீது 2 வழக்குகள் இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகளின்படி, ஒரு வேட்பாளர் தனது பிரமாணப் பத்திரத்தில் அனைத்துத் தகவல்களையும் உண்மையாகத் தெரிவிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ‘வழக்கு இல்லை’ என்றும், மற்றொரு தொகுதியில் ‘வழக்கு உண்டு’ என்றும் குறிப்பிட்டிருப்பது, தகவலை மறைத்ததாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. இதனால் பெரம்பூர் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: விமானங்களில் இனி இலவச சீட் இல்லை..! 60 சதவீத இருக்கை விதியை நிறுத்திவைத்த மத்திய அரசு..!

English Summary

There is a possibility that the candidature of tvk leader Vijay may be rejected in Perambur constituency.

Next Post

Flash : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! இன்று அதிரடி உயர்வு..! எவ்வளவு தெரியுமா..?

Fri Apr 3 , 2026
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
Gold prices

You May Like