தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா – ராதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை அளித்து வருகிறது. முதன்முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “நான்கு நாட்களுக்கு முன்பு இங்கு எதிர்க்கட்சி தலைவர் வந்திருக்கிறார். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். நாம் எவ்வளவு கண்ணியத்துடன் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். அவர்கள்” கொஞ்சம் கூட கண்ணியமே இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
உன்னால் முடிந்தால் உன் வேட்பாளர் என்ன செய்வார் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்லு. அதைவிடுத்து தேமுதிகவை பற்றியும், எங்கள் கூட்டணியில் உள்ள திமுகவை பற்றியும், கலைஞர் ஐயா குடும்பத்தையும், வேட்பாளரையும் அவதூறாக பேசினால் மக்களே தமிழ்நாடு முழுவதும் உன்னை அடிச்சு விரட்டுவார்கள். நாங்கள் மிகவும் கண்ணியமான கட்சி. அண்ணா சொன்னதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கண்ணியமாக தான் பேசுவோம்.
கேப்டன் ராணுவ கட்டுப்பாட்டுடன் வழிகாட்டியுள்ளார். குடும்பத்தை பற்றி திட்டுவதற்காக தேர்தல் நடக்கிறது. உன்னால் முடிந்தால் மக்களுக்கு வந்து நல்லது பண்ணு. தேவையில்லாத வார்த்தைகள் பேசக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசினார். அதுமட்டுமல்லாது 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 சீட்கள், ஒரு மாநிலங்களகை சீட் தருவதாக ஒப்பந்த மே போட்டார். கடைசியில் ஏமாற்றியவர்தான் எடப்பாடி பழனிச்சாமி என்றார்.
Read more: கோடையில் எடையைப் பொறுத்து ஒருவர் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்..? இதோ தெரிஞ்சிக்கோங்க..



