JOB: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை.. ரூ. 20,000 சம்பளம்..! நேர்காணல் மட்டும்தான்!

job

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரவு உள்ளீட்டாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

பதவியின் பெயர்: டேட்டா என்ட்ரீ ஆபரேட்டர்

காலியிடங்கள்: 01

மாதச் சம்பளம்: ரூ. 20,000

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BCA, B.Tech, B.Sc ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாகக் கணினியைச் சிறப்பாக இயக்கத் தெரிந்திருப்பது அவசியமாகும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடத்திற்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காகத் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 08.04.2026

நேர்காணல் நடைபெறும் இடம்: சிறுநீரகவியல் துறை (Department of Nephrology), ஜிப்மர் மருத்துவமனை (JIPMER), புதுச்சேரி – 605006.

தேவையான ஆவணங்கள்: நேர்காணலுக்கு வரும் நபர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read more: “காமராஜரை வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தது சங்கிக் கூட்டம்!” ஸ்டாலின் பகிரங்க குற்றசாட்டு..!

English Summary

Job at JIPMER Hospital, Puducherry.. Rs. 20,000 salary..! Interview only!

Next Post

2 பேர் பலி.. வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபரீதம்..!

Sun Apr 5 , 2026
Two people died in an explosion while illegally making firecrackers at home near Kozhikode, Kerala.
blast 1712152099

You May Like