வீட்டில் மணி பிளான்ட் வைத்திருக்கிறீர்களா..? இந்த 5 தவறுகள் உங்களை ஏழையாகவே ஆக்கிவிடும்!

money plant

வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி பிளான்ட் செடி வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது செழிப்பு, பணவரவு மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால் இதை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால், எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


வாஸ்து விதிகளின்படி, மணி பிளான்ட் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பது சிறந்தது. இந்த திசை செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் திசையாகக் கருதப்படுகிறது. ஆனால் வடகிழக்கு திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது நிதி நிலைத்தன்மையை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த செடியை வளர்க்கும் பாத்திரத்திலும் கவனம் அவசியம். கண்ணாடி பாட்டில் அல்லது களிமண் தொட்டி பயன்படுத்துவது சிறந்தது என வாஸ்து கூறுகிறது. பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டிகளை தவிர்ப்பது நல்லது. மேலும், செடி வைக்கப்படும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் அல்லது காய்தல் போன்றவை எதிர்மறை ஆற்றலின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. அத்தகைய இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும். தொடர்ந்து செடி பாதிக்கப்படுகிறால், அதை மாற்றி புதிய செடியை நடுவது சிறந்தது என கூறப்படுகிறது.

மேலும், இந்த செடியின் கொடி எப்போதும் மேல்நோக்கி வளர வேண்டும் என்பது முக்கிய வாஸ்து நம்பிக்கை. மேல்நோக்கிய வளர்ச்சி வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கீழ்நோக்கி பரவுவதைத் தவிர்த்து, அதனை மேலே ஏற உதவும் வகையில் அமைத்தல் நல்லது.

வாஸ்து நிபுணர்கள் கூறுவதுபடி, தேவையற்ற கத்தரிப்பு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காய்ந்த அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் அகற்றுவது போதுமானது. அதிகமாக வெட்டுவது வீட்டின் செழிப்பை பாதிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Read more: “தறுதலைகளின் வேலையா..? தற்குறிகள் வேலையா..?” வீடியோ பதிவிட்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம்..! என்ன நடந்தது..?

English Summary

Money Plant Vastu: These 5 Mistakes Can Make You Broke, Not Rich!

Next Post

செருப்பை காணிக்கையாக பெற்றுக் கொள்ளும் சொரிமுத்து அய்யனார்.. தமிழகத்தின் வித்தியாசமான கோவில்!

Mon Apr 27 , 2026
Sorimuthu Ayyanar, who receives sandals as offerings.. A unique temple in Tamil Nadu!
sori muthu tem 1

You May Like