இழுபறிக்கு எண்ட் கார்டு! மதுரை மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு..!

melur

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்.பி. பெ. விஸ்வநாதன் மேலூர் தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

மேலூர் தொகுதியைப் பெறுவதில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இரு தரப்பு மோதலால் தொகுதி கை நழுவிவிடக் கூடாது என்பதற்காக, அனுபவம் வாய்ந்த மற்றும் தேசிய அளவில் செல்வாக்குள்ள விஸ்வநாதனைத் தலைமைத் தேர்வு செய்துள்ளது.

Read more: மேஷ ராசியில் குபேர யோகம்.. ஏப்ரல் மாத இறுதிக்குள் கோடீஸ்வரர்களாக மாறப்போகும் ராசிகள் இவைதான்..!

English Summary

Former MP Viswanathan announced as Melur Congress candidate..!

Next Post

கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் பாய்ந்து விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்!

Sun Apr 5 , 2026
Car loses control and falls into canal.. 7 members of the same family seriously injured!
car accident

You May Like