10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிபிஎஸ்இ கல்விமுறையில் பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளில் எதில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுவே இறுதி மதிப்பெண்ணாக கணக்கிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
2025-2026 கல்வியாண்டு முதல், சிபிஎஸ்சி முறையில் கல்வி பயிலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வருடத்திற்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் எழுதும் இந்த இரண்டு பொது தேர்வுகளில், எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுவே இறுதி மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் மீதான கல்வி அழுத்தத்தை குறைப்பதே 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மூன்று முதல் ஆறு வகுப்புகள், மற்றும் 9 முதல் 11 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2024-2025 கல்வியாண்டின் அமர்வுக்கும் மீதமுள்ளவை 2025-2026 கல்வியாண்டுக்கும் தயாராக இருக்கும் என்றார். ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில், 10 பையில்லா நாட்களை அறிமுகப்படுத்தும் கருத்தை முன்னிலைப்படுத்தினார். கலை, கலாச்சாரம், விளையாட்டு போன்றவற்றிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
English Summary: 10th and 12th students from CBSE will be attending to board exams from the 4th coming year.
Read more: “தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய பயணம்”…! – தனது நடை பயணம் குறித்து அண்ணாமலை பேட்டி.!