அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் பிரம்மாண்ட படம்.. சர்பிரைஸ் அப்டேட் நாளை வெளியாகிறது..! படக்குழு அறிவிப்பு..!

allu arjun atlee movie

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.. இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் மிகப்பெரிய ஹிட்டானது. 


இதை தொடர்ந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஃபேண்டசி படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சரஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக AA22xA6 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் தலைப்புப் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்றும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது… அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளது.. மேலும் இந்த படத்தின் மற்றொரு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் (Sun Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு, கோலிவுட்டின் இளம் சென்சேஷன் இசையமைப்பாளாகத் திகழும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

அட்லீயின் தனித்துவமான பாணியிலான ‘மாஸ்’ அம்சங்களையும், பிரம்மாண்டமான விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய, ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது அமையும் என்று கூறப்படுகிறது. இப்படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Read More : “எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் உள்ளன..” த்ரிஷா பரபரப்பு பதிவு..!

RUPA

Next Post

ஓய்வூதியதாரர்களுக்கு குட்நியூஸ்..! குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 25,000-க்கும் அதிகமாக உயரப்போகுது..!

Tue Apr 7 , 2026
8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த குழு எப்போது அமலுக்கு வரும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. பரிந்துரைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக் குழுவானது, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதன்படி, குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் சுமார் ரூ. 25,000 வரை உயரக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த ஊதியத் திருத்தமானது, ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை நிர்ணயிக்கப் பயன்படும் ஒரு […]
pensions 2025

You May Like