SBI வழங்கும் அட்டகாசமான RD திட்டம்.. மாதம் ரூ.561 முதலீட்டில் லட்சாதிபதியாகலாம்..!! முழு விவரம் இதோ..

Saving ac minimum Balance1324235 1

அன்றாட செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மிடில் க்ளாஸ் குடும்பங்களுக்கு சேமிப்பு செய்வது பெரிய சவாலாக மாறியுள்ளது. சம்பளத்தில் இருந்து வீட்டு செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள் போன்றவற்றை சமாளித்த பிறகு, எதிர்காலத்திற்காக பணம் ஒதுக்குவது கடினமாகிறது. ஆனால், அவசர காலங்களில் யாரிடமும் சார்ந்திருக்காமல் நிதி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.


இந்நிலையில், குறைந்த தொகையிலேயே தொடங்கி பெரிய சேமிப்பை உருவாக்க உதவும் திட்டமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா “ஹர் கர் லக்பதி” (Har Ghar Lakhpati) திட்டம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்த திட்டம் ஒரு தொடர் வைப்பு (Recurring Deposit – RD) திட்டமாகும். அதாவது, ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மாதந்தோறும் ஒரு நிரந்தர தொகையை செலுத்தி, காலப்போக்கில் பெரிய நிதியை உருவாக்கலாம்.

எவ்வளவு சேமிக்கலாம்? இந்த திட்டத்தின் மூலம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை நிதி உருவாக்கலாம். முதலீட்டு காலம் மற்றும் மாதாந்திர தொகையைப் பொறுத்து வருமானம் மாறும்.

மாதாந்திர முதலீட்டு கணக்கீடு:

மாதம் ரூ. 593 → 10 ஆண்டுகளில் ரூ.1 லட்சம்
மாதம் ரூ. 25,020 → 3 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம்
மாதம் ரூ. 18,120 → 4 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம்
மாதம் ரூ. 13,910 → 5 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம்
மாதம் ரூ. 5,760 → 10 ஆண்டுகளில் ரூ. 10 லட்சம்

யாருக்கு இந்த திட்டம் ஏற்றது?

  • மாத சம்பளத்தில் வாழும் மிடில் கிளாஸ் மக்கள்
  • மாதம் சிறிய தொகையை சேமிக்க முடிவோர்
  • குழந்தைகளின் கல்வி / திருமணம் / அவசர நிதி திட்டமிடுவோர்
  • ஓய்வூதிய காலத்திற்காக சேமிக்க விரும்புவோர்

வரி தவிர்க்கும் வழிகள்: தொடர் வைப்புத்தொகையிலிருந்து (ஆர்டி) வட்டி வருமானம் ரூ. 40,000 வரை இருந்தால், வரி செலுத்தத் தேவையில்லை. மூத்த குடிமக்களுக்கு, இந்த வரம்பு ரூ. 50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பிற்கு மேல் உள்ள வருமானத்துக்கு 10 சதவீத TDS பொருந்தும்.

நீங்கள் வரி வரம்புக்குள் இல்லை என்றால், படிவம் 15H அல்லது 15G ஐப் பதிவு செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் படிவம் 15H-ஐ வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும், மற்றவர்கள் படிவம் 15G-ஐ சமர்ப்பிக்க வேண்டும். படிவம் 15G அல்லது படிவம் 15H ஒரு சுய அறிவிப்பு படிவம் ஆகும்.

Read more: “தேர்தலுக்காக இவ்வளவு கீழ்தரமாவா பேசுவீங்க..” எடப்பாடி பழனிசாமியை விளாசிய கனிமொழி..!

English Summary

SBI’s amazing RD plan.. Become a millionaire by investing Rs.561 per month..!

Next Post

“இது நடக்கவில்லை எனில் மீண்டும் போர் மூளும்..” போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

Thu Apr 9 , 2026
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இவ்வாறு கூறினார்.. மேலும் தனது பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை, கொடிய முறையில் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், […]
Trump warning to iran

You May Like