அனல் பறக்கும் தேர்தல் களம்.. நாளை கடலூரில் பரப்புரை செய்ய விஜய்க்கு அனுமதி.. உதயநிதிக்கு மறுப்பு..!

vijay udhayanidhi 1

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது.. 


அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் இந்த தேர்தலில் புதிய களமிறங்கி உள்ள தவெக தலைவர் விஜய்யும் பிரச்சாரம் செய்து வருகிறார்.. தான் போட்டியிடும் தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய விஜய் பின்னர் திருச்சி கிழக்கு, புதுச்சேரி, நெல்லை ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. எனினும் பல இடங்களில் விஜய்யின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.. இந்த சூழலில் நேற்றைய தினம் அவர் கடலூரில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார்.. ஆனால் நேற்று புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்றதால் விஜய் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது..

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.. நாளை பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரை பரப்புரை செய்ய உள்ளார். கடலூர் மாவட்டத்தில் விஜய் பரப்புரை எதிரொலியாக உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் விண்ணப்பித்திருந்ததால் உதயநிதி பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.. எனவே உதயநிதி பிரச்சாரம் வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

தேர்தல் விதிமுறைகளின் படி முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. அதன்படி நாளை முதலில் தவெக சார்பில் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் கடலூரில் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

Read More : Breaking : மீண்டும் ஷாக்.. ஒரே நாளில் ரூ.5000 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

RUPA

Next Post

மாநாடு முதல் பிரச்சாரம் வரை.. விஜய்யை பார்த்து அப்படியே காப்பி பேஸ்ட்.. ஸ்டாலின், உதயநிதியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Fri Apr 10 , 2026
Netizens mocking Vijay and copying him.. Stalin and Udhayanidhi..!
vijay stalin

You May Like