தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தென் மாவட்டங்களில் தனது கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுப்பட்டு வருகிறார். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்த விஜய் இன்று காரைக்குடி, சிவகங்கையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி வந்தார்.. அப்போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவியும், மாலைகள் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து காரைக்குடி வந்தடைந்த விஜய் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ரோடு ஷோ மேற்கொண்டார். வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் பாதுகாவலர்கள் சூழ சைக்கிள் ஓட்டி சென்றார். அப்போது விஜயை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்தனர். இதனால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் சைக்கிள் ஓட்டமுடியாமல் நிலைதடுமாறிய விஜயை அவரது பாதுகாவலர்கள் மீட்டு பாதுகாப்பாக மீட்டு பிரச்சார வாகனத்திற்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தொண்டர்களை அப்புறப்படுத்தி தள்ளுமுள்ளு ஏற்படாமல் கட்டுப்பட்டுத்தினர். இதனால் பிரச்சார களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Read more: நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் யஷ்வந்த் வர்மா..!



