அடுத்தடுத்து அதிரடி..! தமிழகத்தின் உள்துறை செயலாளர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Untitled design 5 6 jpg 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.


ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.. மேலும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை அடுத்து தேர்தல் ஆணையம் மாற்றியது.. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டு சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டார்.. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழகத்தின் உள்துறை செயலாளரையும் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.. தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமாரை மாற்றி, மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளராக இருந்த மணிவாசன் தற்போது உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read More : Breaking : விஜய்யின் திருவள்ளூர் பரப்புரையும் ரத்து.. அடுத்தடுத்து ரத்தாகும் பிரச்சாரங்கள்.. இதுதான் காரணமா..?

RUPA

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கு குட்நியூஸ்; இந்த பாலைக் குடிப்பதால் சர்க்கரை அளவு குறையும்..!

Sat Apr 11 , 2026
நீரிழிவு நோயாளிகளுக்கு, தாங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. தேநீர் மற்றும் காபி அருந்திப் பழக்கப்பட்டவர்களுக்கு, எந்தப் பாலைப் பயன்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் அருந்தும் பால் குறித்து கவனமாக இருக்க வேண்டும். அது பால் சார்ந்த பாலாக இருந்தாலும் சரி அல்லது தாவர அடிப்படையிலான பாலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பாலும் உங்கள் குளுக்கோஸ் […]
diabetes 11zon

You May Like